ஆதார் மோசடி!! ஆதார் ஆணையம் எச்சரிக்கை!!
NEWS COVER
0
ஆதார் நம்பர் மோசடி!! ஆதார் ஆணையம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன?
GET NEWS COVER
ஆதார் கார்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாளமாக இருந்து வருகிறது. அரசின் அனைத்து சேவைகளை பெறவும் ஆதார் கார்டு இணைப்பு அவசியமாகிறது. தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது
அப்படிப்பட்ட ஆதார் கார்டு எண்களை வைத்து தற்பொழுது பல்வேறு மோசடி செயல்கள் நடந்து வருகிறது.
ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கு OTP நம்பர் கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு OTP எண்களை யாரும் பகிர வேண்டாம் என்று ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் மூலம் வங்கிக்கணக்கில் பணம் திருடப்படும் அபாயமும் உள்ளது.
மேலும் ஆதார் கார்டுகளை திருத்தம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது அரசின் ஆதார் மையங்கள் மூலமாக மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற மோசடி நபர்களுக்கு OTP எணகளை பகிர வேண்டாம் என ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: தேசிய செய்திகள்