தமிழகத்தில் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
NEWS COVER
1
மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.
GET NEWS COVER
தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மருந்து கடைகளுக்கும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி சிலரை மறந்து விற்பனை கடைகள் போதை தரும் வகையான மருந்துகளை முறையான மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலோ கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் போதைப் பழக்கங்களுக்கும் அடிமையானவர்களுக்கு தவறான நோக்கத்திற்காக மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கும் மருந்துகளை கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அவ்வாறு மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகளை கொடுப்பது தமிழ்நாடு மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்து விதி 1945 ன் கீழ் விதிமீறலாகும்.
அவ்வாறு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்படி மருந்துகள் யாருக்கேனும் தரப்பட்டால் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
அத்துடன் விளம்பரத்தில் வரும் எந்த பொருளும் மருந்து கடைகளில் விற்கக்கூடாது என்ற சட்டமும் வந்தால் சிறப்பாக இருக்கும்
ReplyDelete