தமிழகத்தில் மேலும் 2 கோயில்களுக்கு ரோப் கார் வசதி!!அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
NEWS COVER
0
தமிழகத்துக்கு மேலும் 2 கோயில்களுக்கு புதிய ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்!! அமைச்சர் அறிவிப்பு.
GET NEWS COVER
தமிழகத்தில் மேலும் 2 கோவில்களில் ரோப் கார் வசதி விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு சட்ட பேரவையில் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தான் சார்ந்துள்ள பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநீர் மலை பெருமாள் கோவிலுக்கு ரோப் கார் வசதி எப்பொழுது ஏற்படுத்தி தரப்படும் என்று கேள்வி எழுப்பினார்
அதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள ஐந்து கோவில்களுக்கு ஏற்கனவே ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருத்தணி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், சோளிங்கர், திருச்செங்கோடு, பழனி உள்ளிட்ட இடங்களில் ரோப் கார் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை அறிவிக்கப்படாத இடங்களான பழனி இடும்பன் மலை மற்றும் கோவை அனுவாவி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றிற்கும் தற்பொழுது ரோப் கார் வசதி அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என அமைச்சர் பி கே சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்