நாளையும் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
NEWS COVER
0
நாளையும் கனமைழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
மேலும்திருப்பூர்,தேனி,சேலம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை,திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்