கையொப்பமும் தமிழ்! முன்னெழுத்தும் ( Initial) தமிழ்! பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு.
NEWS COVER
0
கையொப்பமும் தமிழ்! முன்னெழுத்தும் தமிழ்!
பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இனிமேல் தங்களின் கையொப்பத்தையும் இனிஷியலையும் (பெயரின் முன்னெழுத்து) தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என்று மாணவர்கள், மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவரவும் மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும். மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் என கீழ்க்கண்டவாறு சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்திடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் முதற்கட்டமாக EMIS வழியாகப் பராமரிக்கப்படும் 300 மின் பதிவேடுகளில் மாணவர் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர் பெயர்களை தமிழில் பெயர் பதிவேற்றல் செய்யும் பொழுது அதன் முன்னெழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் என அனைத்து நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் அனைவரும் கையொப்பமிடும் போது பெயருக்கு முன் சரியான தமிழ் எழுத்துக்களையே குறிப்பிட்டு கையொப்பமிடுமாறும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன்முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்