புதிய வாகன பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் உயர வாய்ப்பு! முழு விவரம் என்ன?
NEWS COVER
0
தமிழ்நாட்டில் வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சேவை கட்டணம் 10 மடங்கு உயர வாய்ப்பு!
தமிழ்நாட்டில் புதிய வாகனப்பதிவு,மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் தற்போது 10 மடங்கு உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி,
1. தற்காலிக வாகனப் பதிவு மற்றும் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50 ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட உள்ளது.
2. தகுதி சான்று பெற இதுவரையில் கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இனிமேல் ரூ.500/− கட்டணம்.
3. தகுதி சான்று நகல் பெற ரூ.250 கட்டணம் .
4. தகுதி சான்று பெறாத வாகனங்களை திரும்ப பெற சி.எப்.எக்ஸ் நோட்டீஸ் பெறும்போது செலுத்தும் கட்டணம் ரூ.30 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
4. வாகன சோதனை மையங்களுக்கான அனுமதி பழைய கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.5000 ஆகவும்,
5.அனுமதி புதுப்பித்தல் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தபட உள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு இந்த மாதம் இறுதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்