காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு தொகை!
NEWS COVER
0
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு பரிசுத்தொகை!
முதல்வர் வழங்கினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ரூ 4.31 கோடி பரிசுத்தொகையை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ.1.8 கோடி, மற்றும் சத்யனுக்கு ரூ.1 கோடியும்,
சவுரவ் கோசலுக்கு ரூ.40 லட்சமும், தீபிகா பல்லிகலுக்கு ரூ.20 லட்சமும், பயிற்றுனர்களுக்கு ரூ.51 லட்சம், பவானி தேவிக்கு ரூ.35 லட்சம், பிரனவ் வெங்கடேஷ்க்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,
ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தில் வீரர்கள் கண்டறியப்பட்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு தயார்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்