Breaking News

இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்வானிலை மையம் அறிவிப்பு

NEWS COVER
0
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் அதிக அளவு நீர் வரத்து காரணமாக அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கும் தமிழகத்தில் கோயம்புத்தூர்,நீலகிரி, நாமக்கல்,திருப்பூர், ஈரோடு,ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதற்காக அவசர உதவிகளுக்காக கட்டுப்பாட்டு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்புபணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இரண்டு குழுக்களும் திருச்சியில் இரண்டு குழுக்களும் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags: வானிலை செய்திகள்