வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்.. இனி ஆடியோவையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!
NEWS COVER
0
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது வாட்ஸப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ளது இந்நிலையில் வாட்ஸப் ஸ்டேட்டஸாக ஆடியோவை வைப்பதற்க்கு நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி வைக்கலாம். அதுமட்டுமின்றி, வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று இதையும் வாட்ஸ்அப் பயனர்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையில் இருக்கிறது. தற்போது பீட்டா பயனாளர்களுக்கு சோதனையில் உள்ள இந்த ஆடியோ ஸ்டேட்ட்ஸ் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: தொழில்நுட்ப செய்திகள்